50 ஆண்டுகளாக உணவே சாப்பிடாமல் வாழும் 75 வயது மூதாட்டி; தண்ணீர் மட்டும்தான் - எப்புட்றா..?
50 ஆண்டுகளாக தண்ணீர் ஆகாரங்களை மட்டுமே குடித்து 75 வயது மூதாட்டி ஒருவர் உயிர் வாழ்ந்து வருகிறார்.
விநோத மூதாட்டி
வியட்நாமின் லோக் நின்ஹ பகுதியைச் சேர்ந்தவர் புய் தி லொய் (75) என்ற மூதாட்டி. இவர் கடந்த 50 ஆண்டுகளாக உணவு எதையும் உண்ணாமல் வாழ்ந்து வருகிறார். வெறும் தண்ணீர் மற்றும் கூல் ட்ரிங்க்ஸ் மட்டுமே குடித்து உயிர் வாழ்கிறார்.
கடந்த 1963ம் ஆண்டு போரில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க மலை மீது ஏறியபோது புய் தி லொயை மின்னல் தாக்கியது. இதில் மயக்கமடைந்து பின்னர் உயிர் பிழைத்த அவர் பழைய நிலைமைக்கு திரும்பவில்லை. சுயநினைவு பெற்ற பிறகு, பல நாட்கள் எதையும் சாப்பிடவும் இல்லை. அப்போது அந்த பெண்ணுக்கு இனிப்பு மற்றும் தண்ணீர் மட்டும் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
அதிர்ச்சி தகவல்
இதற்கு பிறகு உணவு உண்ணும் பழக்கத்தையே புய் தி லொய்கைவிட்டுள்ளார். மேலும், 1970ம் ஆண்டுக்கு பிறகு உணவின் வாசனையே அவருக்கு குமட்டலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தனது வீட்டில் உள்ள உணவைக் கூட ருசி பார்ப்பதில்லையாம்.
குளிர்சாதனப் பெட்டி முழுவதும் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் கூல் ட்ரிங்க்ஸை மட்டுமே நிரப்பி வைத்துள்ளதாக புய் தி லொய் கூறியுள்ளார். வெறும் தண்ணீர் ஆகாரங்களை மட்டுமே குடித்து அரை நூற்றாண்டுகளாக உயிர் வாழ்ந்து வரும் இந்த விநோத மூதாட்டி கூறும் தகவல்கள் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.