தகாத உறவில் கணவன் - ஆத்திரத்தில் காதலியை உயிரோடு எரித்த மனைவி!
கணவனின் காதலியை, மனைவி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
திருவள்ளூர், ராமர்கோயில் பகுதியைச் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). இவரது மனைவி பார்வதி (36). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது.
சுரேஷ், திருவள்ளூர் மார்க்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளாக காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இதற்கிடையில், புல்லரம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் 3 மகன்களுக்கு தாயான பெண்மணி ஒருவருடன் சுரேஷ் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, மார்க்கெட்டில் அந்த பெண்ணுக்கு ஒரு கடையை வாடகை எடுத்து காய்கறி வியாபாரம் செய்ய வைத்துள்ளார். இதனையறிந்த மனைவி அந்த பெண்ணை கடைக்கு வரக்கூடாது எனக் கூறி தகராறில் ஈடுப்பட்டுள்ளார். இருப்பினும், 6 மாதங்களுக்குப் பின் அந்தப் பெண்ணை மீண்டும் காய்கறி கடைக்கு சுரேஷ் அழைந்து வந்துள்ளார்.
மனைவி வெறிச்செயல்
இதனால் ஆத்திரமடைந்த மனைவி தந்தையுடன் மார்க்கெட்டுக்கு கேனில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு வந்துள்ளார். இதனையடுத்து, பார்வதி தந்தையிடம் இருந்த பெட்ரோல் கேனை வாங்கி பெண்ணின் மீது ஊற்றியுள்ளார். கடையில், சாமி படத்திற்கு ஏற்றி வைத்திருந்த விளக்கில் பெட்ரோல் பரவி மளமளவென தீ பற்றி எரிந்துள்ளது.
உடனே, மார்க்கெட்டில் இருந்த மற்ற வியாபாரிகள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 50% க்கு மேல் தீக்காயம் பரவிய நிலையில் அந்தப் பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் பார்வதி, சுரேஷ், விஜயா மோகன்,முரளி , நதியா, லட்சுமி, சங்கர் ஆகிய 8 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.