ஷேர் ஆட்டோவில் சில்மிஷம்.. நடுரோட்டில் டிரைவரை செருப்பால் தாக்கி புரட்டி எடுத்த பெண்!

Chennai Sexual harassment
By Vinothini Nov 18, 2023 05:57 AM GMT
Report

பெண் ஒருவர் டிரைவரை அடித்து தாக்கியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷேர் ஆட்டோ

சென்னையில் பல இடங்களில் ஷேர் ஆட்டோ செயல்பட்டு வருகிறது. அதில் பெண் ஒருவர் வண்ணாரப்பேட்டையில் இருந்து புதுவண்ணாரப்பேட்டைக்கு செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறினார்.

woman-attacked-auto-driver-for-harassing-her

அப்பொழுது ஆட்டோ கூட்டமாக இருந்ததால், ஓட்டுநரின் இருக்கையின் அருகில் அமர்ந்து வந்துள்ளார். அருகில் அமர்ந்ததில் இருந்தே அந்த டிரைவர் இந்த பெண்ணிடம் சில்மிஷ வேலை செய்து வந்ததாக தெரிகிறது.

இரவானாலே பாலியல் டார்ச்சர் செய்யும் கணவர்.. ஆத்திரத்தில் அந்த உறுப்பில் மிதித்தே கொன்ற மனைவி - கொடூரம்!

இரவானாலே பாலியல் டார்ச்சர் செய்யும் கணவர்.. ஆத்திரத்தில் அந்த உறுப்பில் மிதித்தே கொன்ற மனைவி - கொடூரம்!

புரட்டி எடுத்த பெண்

இந்நிலையில், கடுப்பான அந்த பெண் புதுவண்ணாரப்பேட்டை லஷ்மி அம்மன் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதும், ஆட்டோ ஓட்டுநரின் சட்டையை பிடித்து வெளியே இழுத்து செருப்பால் தாக்கியுள்ளார்.

woman-attacked-auto-driver-for-harassing-her

சம்பவ இடத்தில் பொதுமக்கள் கூடியதும் அவர்களிடம் நடந்ததை கூறி மீண்டும் தாக்கியுள்ளார். பின்னர், அங்கு இருந்தவர்கள் அந்த பெண்ணை சமாதானம் செய்ததும் அவர் அங்கிருந்து சென்றார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.