டாக்சியில் ஏறிய வெளிநாட்டு பெண் - திடீரென கத்தியால் சதக்...சதக்கென... டிரைவரை குத்தி கிழித்த பரபரப்பு சம்பவம்
ஒரு டாக்சி டிரைவரை இளம் பெண் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோட சம்பவம் ஹரியானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம், குருகிராமில் அருகில் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் அருகே பல டாக்சிகள் பயணிகளை ஏற்றிச் சென்றுக்கொண்டு வந்துக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், விமான நிலையத்திலிருந்து எகிப்து நாட்டை சேர்ந்த ஒரு பெண் (30) பர்தா அணிந்து வந்தார். அவரைப் பார்த்ததும், ஒரு டாக்சி ஓட்டுநர் அந்தப் பெண்ணை தனது டாக்சியில் ஏறுமாறு அழைத்தார்.
உடனே, அந்தப் பெண்ணும் டாக்சியில் ஏறினார். டாக்சி டிரைவர் காரை ஓட்டிக்கொண்டிருக்கும்போது, அந்தப் பெண் தான் மறைத்து வைத்த கத்தியால் அந்த டாக்சி டிரைவரை சராமரியாக குத்தியுள்ளார். உடனே காரை நிறுத்தியவரின் அலற கத்தினார். உடனே அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர்.
அப்போது, காரிலிருந்து அந்த பர்தா அணிந்த பெண் தப்பி ஓட முயற்சித்தார். உடனே அங்கிருந்தவர்கள் அப்பெண்ணை மடக்கிப் பிடித்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர், டாக்சி டிரைவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால், அப்பெண் எகிப்து மொழியில் பேசினார். அவரின் பேச்சை ஒரு ட்ரான்ஸ்லேட்டர் மூலம் மொழி பெயர்த்த போலீசார் அதை பதிவு செய்தனர்.
அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசுவதால் அவர் மன நிலை சரியில்லாதவரா? எதற்காக அந்த டாக்சி டிரைவரை கொலை வெறியோடு குத்தினார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.