17 வயது சிறுமியுடன் 70 வயது முதியவர் - பாலியல் தொழிலில் தள்ளிய பெண்!
பாலியல் தொழில் செய்ததாக பெண் ஒருவர் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொழில்
சென்னை, வளசரவாக்கத்தில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து, விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் சோதனையிட்டனர்.
அப்போது, 17 வயது சிறுமியுடன் 70 வயது முதியவர் இருந்ததை கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். தொடர் விசாரணையில், முதியவர் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராமசந்திரன் என்பது தெரியவந்தது.
மேலும், சுமித்ரா என்பவர் பாலியல் தொழில் புரோக்கராக செயல்பட்டு வந்திருக்கிறார். இவரின் மகள், பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். அதனால், சுமித்ரா தன்னுடைய மகள் மூலம் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்திருக்கிறார்.
சிக்கிய கும்பல்
சுமித்ராவுக்கு இந்தச் செயலுக்கு அவரின் குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் உதவியுள்ளனர். இவர்தான் 17வயது சிறுமியையும் பாலியல் தொழிலுக்கு அனுப்பி ரூ 25 ஆயிரம் வாங்கியுள்ளார். தொடர்ந்து, சுமித்ரா கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சா, கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த குற்ற சம்பவத்தில் சுமித்ராவின் சகோதரி ராணி, ராணியின் ஆண் நண்பர் ராம், நேபாளத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கோவையைச் சேர்ந்த அசோக்குமார், முதியவர் ரமணிதரன் (70) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 7 செல்போன்கள், கார் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த கும்பல் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்த அப்பாவி பெண்கள், குடும்ப வறுமைக்காக வேலை தேடி வந்த பெண்கள் ஆகியோரிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.