14 வயதிலேயே பாலியல் தொழில்; அண்னன், அப்பா தான் ஏஜெண்ட் - அதிர்ச்சி பின்னணி!
பாலியல் தொழிலை நம்பி ஒரு கிராமமே வாழ்ந்து வருகிறது.
பாலியல் தொழில்
ராஜஸ்தான், கக்ரானாக்லா கிராமத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தினர் நடன கலைஞர்களாக இருந்தனர். பிரபுக்களுக்காக நடனமாடி வந்தனர். ஜமீன்தாரி முறையை ஆங்கிலேயர்கள் தடைசெய்த பின் வறுமையில் அல்லாடியுள்ளனர்.
அதன்பின், பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட தொடங்கியுள்ளனர். நாளடைவில் அதுவே இவர்களின் குடும்ப தொழிலாக மாறியுள்ளது. 14 வயது தொடக்கத்திலிருந்தே பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
விருப்பப்படி பாலியல் தொழிலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கக்கூடாது - காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!
பின்னணி என்ன?
இந்த தொழிலில் ஈடுபடும் பெண்களின் அண்ணன்கள் மற்றும் அப்பாக்களே ஏஜெண்ட்களாக செயல்படுகின்றனர். இந்த சமூக பெண்களுக்கு பெரும்பாலும் திருமணம் நடைபெறுவது இல்லை.
ஆனால், திருமணம் செய்துக்கொண்டால் பாலியல் தொழிலில் ஈடுபட அனுமதிக்கப்படுவது இல்லை. ஒரு நாளைக்கு சுமார் ரூ.1000 முதல் ரூ.2000 வரை இந்த தொழிலில் கிடைப்பதாகவும், இதுவே இதர கூலி தொழில்களில் வெறும் ரூ.150 மட்டுமே கிடைப்பதாகவும் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இங்குள்ள ஆண்கள் வேறு தொழில் செய்ய சென்றால், இவர்களின் சமூக பெயர் பார்த்து வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறுகின்றனர்.