தேவாலயம் என்ற பெயரில் பாலியல் தொழில்...சிக்கிய பாதிரியார்!

Kanyakumari Church
By Thahir Jul 14, 2021 01:17 PM GMT
Report

கன்னியாகுமரி அருகே வீட்டில் தேவாலயம் (சர்ச் ) நடத்தி பாலியல் தொழிலில் ஈடுபட்ட போதகர் மற்றும் தாய்,மகள் உட்பட நான்கு பெண்கள் மூன்று ஆண்களை போலீசார் கைது செய்தனர் அவர்களிடம் இருந்த சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

தேவாலயம் என்ற பெயரில் பாலியல் தொழில்...சிக்கிய பாதிரியார்! | Church Kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம் எஸ்டி மங்காடு பகுதியை சேர்ந்தவர் லால் ஷைன் சிங் 40 வயதான இவர் மத போதகராக இருந்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள சொகுசு வீட்டில் பெடரல் சர்ச் ஆப் இந்தியா என்ற பெயரில் தேவாலயம் (சர்ச்) நடத்தி வருகிறார்.

தேவாலயம் என்ற பெயரில் பாலியல் தொழில்...சிக்கிய பாதிரியார்! | Church Kanyakumari

இந்த நிலையில் அந்த வீட்டில் இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் சொகுசு கார்களில் வந்து செல்வதாகவும் இந்த சர்ச் பெயரை பாதுகாப்பிற்க்காக வைத்து கொண்டு விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தபோது 19 வயது இளம் பெண் , நடுத்தரவயது பெண், சிறிது வயது முதிர்ந்த பெண் என கேரளா மாநில பெண்கள் அறைகுறை ஆடைகளுடன் படுக்கை அறைகளில் ஆண்களுடன் இருப்பதை பார்த்த போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.

இதனையடுத்து மதபோதகர் லால் ஷைன் சிங்கை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது அவர் போதகத்திற்கு வருவது போல் அடிக்கடி வந்து இளம் பெண்கள் மற்றும் ஆண்களுடன் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார்.இதற்கு உடந்தையாக இருந்த ஷைன், ஷிபின்,ஞாறான்விளை பகுதியை சேர்ந்த ராணி,சுகந்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தேவாலயம் என்ற பெயரில் பாலியல் தொழில்...சிக்கிய பாதிரியார்! | Church Kanyakumari

கைது செய்யப்பட்ட 19 வயது இளம் பெண்ணை தாயே பாலியல் தொழிலுக்கு தள்ளியதாக கூறியுள்ளார்.அதன்பேரில் நித்திரவிளை போலீசார் போதகர் லால் ஷைன் சிங் மற்றும் இரண்டு இளம் வயது பெண்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இரண்டு வருடங்களாக தாயும் 19 வயது மகளும் பாலியல் தொழில் ஈடுபட்டு வருவது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.