'காதலித்து ஏமாற்றிவிட்டான்'; தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டிய பெண் - அதிர்ச்சி பின்னணி!

Tamil nadu Crime Dindigul
By Jiyath Nov 21, 2023 02:55 AM GMT
Report

பேஸ்புக் மூலம் காதலித்து ஏமாற்றி விட்டதாக போஸ்டர் ஒட்டிய 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது.

போஸ்டர் ஒட்டிய பெண்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள கொங்கபட்டி கிராமத்தை​ சேர்ந்தவர் ரோஷன்​ (​28). இவர் பேஸ்புக் மூலம் பொள்ளாச்சியை சேர்ந்த உஷா​ (31) என்ற பெண்ணுடன் அறிமுகமாகி பேசி பழகி வந்துள்ளார்.

ஒருகட்டத்தில் உஷா​வின் நடவடிக்கையில் ரோஷனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் தனது பேஸ்புக் பக்கத்தை முடக்கி, உஷாவின் போன் நம்பரையும் பிளாக் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உஷா "காதலித்து ஏமாற்றிவிட்டான்" என்ற வாசகத்துடன், இருவரும் சேர்ந்திருப்பது போன்று புகைப்படத்தை எடிட் செய்து நிலக்கோட்டைப் பகுதியில் தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டியிருக்கிறார்.

'வேலியே பயிரை மேய்ந்த கதை' - புகாரளிக்க வந்த சிறுமியை மிரட்டி சீரழித்த சப்-இன்ஸ்பெக்டர்!

'வேலியே பயிரை மேய்ந்த கதை' - புகாரளிக்க வந்த சிறுமியை மிரட்டி சீரழித்த சப்-இன்ஸ்பெக்டர்!

கொலை மிரட்டல்

மேலும், ரோஷனின் தந்தையை வழிமறித்த, உஷா மற்றும் சவுந்திரராஜன்(55), சிவஞானம்(45), கிருஷ்ணவேணி(40) ஆகிய 4 பேர், ரூ.5லட்சம் பணம் கொடுக்காவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

இது தொடர்பாக ரோஷனின் தந்தை அளித்த புகாரின்பேரில், உஷா​ உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், விசாரணையில் உஷா என்ற கமலேஸ்வரி, இதேபோல் பல்வேறு வாலிபர்களை காதல் வலையில் வீழ்த்துவது போல் பழகி பணம் பறித்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் தொடந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.