5 மாத பெண் குழந்தையை கொன்று கால்வாயில் வீசிய கொடூரம் - தாய் வெறிச்செயல்!

Attempted Murder Crime Kallakurichi
By Sumathi Aug 22, 2024 02:30 PM GMT
Report

தாய் தனது 5 வயது குழந்தையை கொன்று வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகாத உறவு?

கள்ளக்குறிச்சி, சிறுநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிராஜ்(24). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி(21). இவர்களுக்கு ராதிகா(3), லாவண்யா என்ற 5 மாத கைக்குழந்தையும் இருந்துள்ளது.

மணிராஜ் வேறு ஊரில் தங்கி ஆடுகள் மேய்த்து வருவதால், ராஜேஸ்வரி தனது 2 பெண் குழந்தைகளுடன் வடலூரில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது கணவர் மணிராஜ் 2 பேருடன் வந்து கைக்குழந்தையான லாவண்யாவை தூக்கிச் சென்றுவிட்டதாகவும், அந்த குழந்தையை மீட்டு தரவேண்டும் என காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். தொடர்ந்து, மணிராஜை பிடித்து விசாரித்தனர். அதில், அவருக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

20 வயது மாணவனுடன் 42 வயது பெண் தகாத உறவு - உல்லாசத்தில் அரங்கேறிய கொடூரம்!

20 வயது மாணவனுடன் 42 வயது பெண் தகாத உறவு - உல்லாசத்தில் அரங்கேறிய கொடூரம்!

குழந்தை கொலை

இதனால், சந்தேகம் ஏற்பட்டு ராஜேஸ்வரியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் தனது குழந்தைக்கு காதில் சீழ் வடிந்ததால் மருந்து போட்டதாகவும், சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத்திணறல்,


மயக்கம் ஏற்பட்டதால் இறந்து விட்டதாக நினைத்து வடலூர்-கடலூர் சாலையில் உள்ள அய்யனேரி அருகே கழிவுநீர் கால்வாயில் குழந்தையை வீசி விட்டு தனது கணவர் குழந்தையை தூக்கிச் சென்று விட்டதாக நாடகமாடியது தெரியவந்தது. உடனே, போலீஸார் குழந்தையின் உடலை கைப்பற்றி தாயை கைது செய்தனர்.

அதனையடுத்த தீவிர விசாரணையில், தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் 5 மாத குழந்தையைக் கொலை செய்ததாக தாய் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.