மனைவி வீட்டில் இல்லாதபோது.. தேவகவுடா பேரனுடன் சிக்கிய மகன் - பணிப்பெண் பகீர் புகார்!

Sexual harassment Karnataka Crime
By Sumathi Apr 29, 2024 04:36 AM GMT
Report

பாலியல் வழக்கில் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் வழக்கு

ஜேடிஎஸ் எனப்படும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் எச் டி தேவகவுடா. இவரது பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்பியாக உள்ளார்.

மனைவி வீட்டில் இல்லாதபோது.. தேவகவுடா பேரனுடன் சிக்கிய மகன் - பணிப்பெண் பகீர் புகார்! | Woman About Prajwal Revanna House Harrassment

இந்நிலையில், இவர் பல பெண்களை கடுமையாக பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வீடியோக்கள் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய செக்ஸ் ஸ்கேண்டல் ஆக இந்த சம்பவம் மாறியுள்ளது. இதற்கிடையில் பிரஜ்வல் ரேவண்ணா ஏற்கனவே வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் நாகலட்சுமி, முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தற்போது, ரேவண்ணா வீட்டு பணிப்பெண் போலீசில் புகாரளித்துள்ளார்.

பாலியல் வழக்கில் பொதுமன்னிப்பு - முதல் பெண் குடியரசுத் தலைவர் ராஜினாமா!

பாலியல் வழக்கில் பொதுமன்னிப்பு - முதல் பெண் குடியரசுத் தலைவர் ராஜினாமா!

 பணிப்பெண் புகார்

அதன்படி, ரேவண்ணாவின் மனைவி வீட்டில் இல்லாத போது ரேவண்ணாவும் அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணாவும் பெண்களை பலாத்காரம் செய்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். பிரஜ்வல் என்னை அவரது அறைக்கு அழைத்த போதே சிலர் எச்சரித்திருந்தனர்.

மனைவி வீட்டில் இல்லாதபோது.. தேவகவுடா பேரனுடன் சிக்கிய மகன் - பணிப்பெண் பகீர் புகார்! | Woman About Prajwal Revanna House Harrassment

ஸ்டோர் ரூமுக்குதான் முதலில் வரவழைப்பார். அங்கு தொடக் கூடாத இடங்களில் தொட்டு ஆபாசமாக நடந்து கொள்வார். பின்னர் சேலையின் பின்னையும் அவரே கழற்றிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்வார். ஒரு கட்டத்தில் என் மகளுடனும் ஆபாசமாக வீடியோ காலில் பேசத் தொடங்கினார்.

அப்பாவும் மகனும் பெண்களை சூறையாடுவதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகவே தற்போது பகிரங்கமாக போலீசில் புகார் கொடுத்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, 300க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.