பாலியல் வழக்கில் பொதுமன்னிப்பு - முதல் பெண் குடியரசுத் தலைவர் ராஜினாமா!
பாலியல் குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கியதால் ஹங்கேரி நாட்டு அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பொது மன்னிப்பு
ஹங்கேரி நாட்டில் அரசு நடத்தும் சிறார் இல்லத்தில் சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை பிரச்சனை இருந்துள்ளது. இந்த வழக்கில் முன்னாள் துணை இயக்குநர் கைது செய்யப்பட்டு, குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டதாக தண்டிக்கப்பட்டார்.
ஆனால் கடந்த 2023-ம் ஆண்டு அந்த நபருக்கு குடியரசுத் தலைவர் அதிகாரத்தின் அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இந்த விவாகராம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்நாட்டு எதிர்க்கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிபர் ராஜினாமா
இந்நிலையில் ஹங்கேரி நாட்டின் குடியரசுத் தலைவர் கத்தலின் நோவக், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்.
பாலியல் குற்றத்தை மறைத்தவருக்கு நான் மன்னிப்பு வழங்கியதன் மூலம் தவறு செய்துவிட்டேன். நான் காயப்படுத்தியவர்களிடமும், பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன். நான் எப்போதும் அவர்களை ஆதரிக்கவில்லை.
நான் குழந்தைகள் மற்றும் குடும்பங்களைப் பாதுகாப்பதற்கு ஆதரவாக இருக்கிறேன், இருந்தேன், இருப்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார். கத்தலின் நோவக் (46) கடந்த 2022-ம் ஆண்டு ஹங்கேரி நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.