சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த எம்.எல்.ஏ - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Sexual harassment Uttar Pradesh India
By Jiyath Dec 13, 2023 10:20 AM GMT
Report

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் உத்திர பிரதேச எம்.எல்.ஏ குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை 

உத்திர பிரதேச மாநிலம் துத்தி சட்டமன்றத் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராம்துலார் கோண்ட். கடந்த 2014ம் ஆண்டு சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த எம்.எல்.ஏ - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! | Uttar Pradesh Mla Found Guilty Of Raping Minor

அந்த சிறுமியின் சோகதரர் அளித்த புகாரின் பேரில் ராம்துலார் கோண்ட் மீது போக்சோ சட்டம் மற்றும் கற்பழிப்பு உள்ளிட்ட இரு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த பாலியல் வன்கொடுமை நடைபெறும்போது அவர் எம்.எல்.ஏ.-வாக இல்லை.

நீதிமன்ற அதிரடி 

தேர்தலில் வெற்றிபெற்று அவர் எம்.எல்.ஏ ஆனதால், இந்த வழக்கு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் வந்தபோது, ராம்துலார் கோண்ட் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த எம்.எல்.ஏ - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! | Uttar Pradesh Mla Found Guilty Of Raping Minor

மேலும் , இந்த வழக்கில் நாளை மறுதினம் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ராம்துலார் கோண்ட் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் தற்போது நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.