இந்த நாட்களில் கண்டிப்பா ஆஃபீஸ் வரலைனா வேலை இல்லை - எச்சரித்த பிரபல நிறுவனம்!

Wipro
By Sumathi Nov 09, 2023 04:46 AM GMT
Report

ஊழியர்களுக்கு விப்ரோ நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

விப்ரோ

முன்னணி மென்பொருள் சேவை நிறுவனங்களில் ஒன்று விப்ரோ. இது கட்டாய ஹைப்ரிட் வேலைக் கொள்கையை உருவாக்கியுள்ளது. அதன்படி, ஊழியர்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அலுவலகத்தில் இருக்க வேண்டும்.

wipro update

நவம்பர் 15, 2023 முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த முடிவானது, TCS மற்றும் Infosys உள்ளிட்ட முக்கிய இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்களை வழிமொழிவதாக உள்ளது.

விப்ரோ அதிரடி: உற்சாகத்தில் ஐடி ஊழியர்கள் - அறிவிப்பு என்ன..

விப்ரோ அதிரடி: உற்சாகத்தில் ஐடி ஊழியர்கள் - அறிவிப்பு என்ன..

வேலைக் கொள்கை

இதுகுறித்த அதிகாரப்பூர்வமாக மின்னஞ்சல் நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், புதிய பணிக் கொள்கையைப் பின்பற்றவில்லை என்றால், ஜனவரி 7, 2024 முதல் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும். பிரச்சனைகள், வேலை நீக்கம் போன்ற விஷயங்களை வீணாக சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.

இந்த நாட்களில் கண்டிப்பா ஆஃபீஸ் வரலைனா வேலை இல்லை - எச்சரித்த பிரபல நிறுவனம்! | Wipro Employees Return To Office For 3 Days A Week

இந்த விதிமுறைகள் எல்லா நாடுகளுக்கும் ஒரே மாதிரி இல்லாமல் வெவ்வேறு நாடுகளுக்கு அதன் உள்ளூர் விதிகளை மனதில் கொண்டு அதற்கு ஏற்ப சில மாற்றங்களைச் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.