300 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய விப்ரோ : காரணம் என்ன?
போட்டி நிறுவனங்களில் ரகசியமாக பணி செய்து வந்த 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது விப்ரோ நிறுவனம். இதனை அந்நிறுவனத்தின் நிர்வாக தலைவர் ரிஷத் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.
விப்ரோ நிறுவனம்
விப்ரோ நிறுவனத்தில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அங்கு பணியாற்றும் சிலர் நேரடியாக போட்டி நிறுவனங்களிலும் ரகசியமாக பணியாற்றி வருகின்றனர்.
300 பேர் நீக்கம்
அப்படி வேலை செய்து வருபவர்களில் 300 பேரை அடையாளம் கண்டோம். அவர்கள் மீது நிறுவனம் வைத்த நாணயத்தை மீறும் வகையில் அவர்களது செயல்பாடு அமைந்துள்ளது. அதனால் அவர்களை பணிநீக்கம் செய்துள்ளோம்.
விப்ரோவில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வேறு நிறுவனங்களில் பணியாற்ற ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதுவும் ஒருவகையிலான மோசடிதான் என்று அந்நிறுவனத்தின் நிர்வாக தலைவர் ரிஷத் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.
ஒரே சமயத்தில் 300 பேரை பணியினை விட்டு நீக்கியுள்ளது வர்த்த உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.