விப்ரோ அதிரடி: உற்சாகத்தில் ஐடி ஊழியர்கள் - அறிவிப்பு என்ன..

Wipro
By Sumathi Nov 07, 2022 07:19 AM GMT
Report

விப்ரோவின் அதிரடி அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விப்ரோ அறிவிப்பு

இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனம்தான் விப்ரோ. இது சமீபத்தில், அதிகப்படியான சரிவுகளை எதிர்கொண்டு இருக்கும் நிலையிலும், செப்டம்பர் காலாண்டில் A முதல் B3 வரையிலான அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும் முழு வேரியபிள் பே தொகையை அளிப்பதாக அறிவித்துள்ளது.

விப்ரோ அதிரடி: உற்சாகத்தில் ஐடி ஊழியர்கள் - அறிவிப்பு என்ன.. | Wipro Announces About Variable Pay Issue

பிரஷ்ஷர்கள் முதல் டீம் லீடர் ஊழியர்களுக்கு 100% வேரியபிள் பே அளிக்கப்படும் நிலையில் தாண்டி மற்ற பிரிவு ஊழியர்களுக்கு அவரவர் செயல்திறன் அடிப்படையில் வேரியபிள் பே அளிக்கப்படும். மேலும், விப்ரோ ஊழியர்களைத் தக்க வைக்க, 16000 பேருக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.

வேரியபிள் பே 

கணக்குபடி, செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் செயல்திறன் 93.5 சதவீதமாக இருக்கும் நிலையில், ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்த காரணத்தால் 1.07 மடங்கு வேரியபிள் பே தொகைஅயை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த அளவீடு தான் ஊழியர்களின் வேரியபிள் பே தொகையைக் கணக்கிட உதவும் அடிப்படையாக உள்ளது. செப்டம்பர் மாத தொகையை நவம்பர் மாத சம்பளத்தில் பெறுவார்கள் எனத் தெரிகிறது.