மாடல் அழகியின் வெறும் கால்களால் மிதித்து தயாரிக்கப்படும் ஒயின் - இவ்வளவு விலையா..?
மாடல் அழகி ஒருவர் வெறும் கால்களால் திராட்சை பழங்களை நசுக்கி ஒயின் தயாரிக்கிறார்.
எமிலி ரே
உலகம் முழுவதும் உள்ள மது பிரியர்களுக்கு விருப்ப பானமாக ஒயின் உள்ளது. அதனை எவ்வளவு விலை கொடுத்தும் அருந்துவதற்கு அவர்கள் தயாராக உள்ளனர். அந்தவகையில் இங்கிலாந்தை சேர்ந்தவர் மாடல் அழகியான எமிலி ரே (30).
இவர் கால் மாடலாக புகழ் பெற்றவர் ஆவார். எமிலி வெறும் கால்களால் திராட்சை பழங்களை நசுக்கி ஒயின் தயாரிக்கிறார். தனது கால்களால் நசுக்கப்பட்ட ஒயின் சுவையை பலர் விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
சிம்ப் ஒயின்
மேலும், சொந்தமாக 'சிம்ப் ஒயின்' என்று பெயரிடப்பட்ட ஒயின் பிராண்டை அவர் ஆரம்பித்துள்ளார். திராட்சைகளை தனது கால்களால் நசுக்கி தயாரிக்கப்படும் ஒரு பாட்டில் ஒயினில் விலை சுமார் 100 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 10,662) என்று எமிலி தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஒவ்வொரு பாட்டிலிலும் எனது பாதத்தின் ஒரு சிறிய பகுதி உள்ளது. அதைத்தான் கால் ரசிகர்கள் விரும்புவார்கள் என நான் நினைக்கிறேன்" என்றும் எமிலி ரே கூறியுள்ளார்.