பூமிக்கும், மனித குலத்துக்கும் பேராபத்து; நம்மால் தடுக்க முடியாது - எச்சரிக்கும் ISRO தலைவர்!

India Indian Space Research Organisation World ISRO
By Jiyath Jul 06, 2024 10:27 AM GMT
Report

ராட்சத அளவிலான ஒரு விண்கல் 2029-ம் ஆண்டு பூமியை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ராட்சத விண்கல்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது நடந்த கலந்துரையாடலில் பேசிய அவர் "அபோபிஸ் (Apophis) என்ற ராட்சத அளவிலான ஒரு விண்கல் 2029-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி பூமியை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பூமிக்கும், மனித குலத்துக்கும் பேராபத்து; நம்மால் தடுக்க முடியாது - எச்சரிக்கும் ISRO தலைவர்! | Giant Meteorite Hitting Earth Warns Isro Somnath

2036-ல் மீண்டும் அது பூமியைத் தாக்கலாம். 370 மீட்டர் விட்டம் கொண்ட இந்த விண்கல் பூமிக்கும் மனித குலத்துக்கும் அதிக ஆபத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற சம்பவங்கள் வரலாற்றில் பலமுறை நடந்துள்ளது. எனவே, இது ஏற்படாது என்று எந்த உத்தரவாதமும் இல்லை.

இந்த 6 நாட்களுக்கு சமூக வலைத்தளங்களுக்கு தடை - என்ன காரணம்?

இந்த 6 நாட்களுக்கு சமூக வலைத்தளங்களுக்கு தடை - என்ன காரணம்?

மாற்று வழிகள் 

நாம் பூமித்தாய்க்கு எதுவும் ஆகக்கூடாது என்றே விரும்புகிறோம். உலகத்தில் மனித குலம் என்றென்றும் வாழவேண்டும் என்பதே நமது விருப்பம். ஆனால், நடக்க உள்ளதை நம்மால் தடுக்க முடியாது. அசம்பாவிதங்களுக்கு நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன. நாம் தயாராக இருக்க வேண்டும்.

பூமிக்கும், மனித குலத்துக்கும் பேராபத்து; நம்மால் தடுக்க முடியாது - எச்சரிக்கும் ISRO தலைவர்! | Giant Meteorite Hitting Earth Warns Isro Somnath

நடக்க உள்ளதை எதிர்க்க மாற்று வழிகளை யோசித்தாக வேண்டும். சில சமயங்களில் மட்டுமே பூமிக்கு அருகில் வரும் ஆபத்தை நம்மால் கணிக்க முடிகிறது. ஆபத்துகளை கண்டறிய இன்னும் தொழிநுட்பத்தை முன்னேற்றியாக வேண்டும். விண் கற்களை குறித்த புரிதலை நாம் மேம்படுத்தியாக வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.