நீங்க மெடிக்கல் லீவ் எடுப்பீங்களா? பிரதமரை கேள்வி கேட்ட நபர் - என்ன சொன்னார் தெரியுமா!
குவைத்தில் தொழிலாளி ஒருவர் கேட்ட கேள்விக்குப் பிரதமர் மோடி பதில் அளித்த நிகழ்வு கவனம் பெற்றுள்ளது.
குவைத்
பிரதமர் மோடி குவைத் மன்னர் Sheikh Meshal Al-Ahmad அழைப்பை ஏற்று, 2 நாள் பயணமாகச் சென்றுள்ளார். விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அரசு முறை வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு ராமாயணம் மற்றும் மகாபாரத நூல்களை அரபு மொழியில் பிரதமர் மோடி வெளியிட்டார். அரபு மொழியில் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை மொழிபெயர்த்தவர்களைப் பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டினார்.
பிரதமர் மோடி
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமர் மோடி குவைத் நாட்டின் முக்கியத் தலைவர்களுடன் உரையாற்றினார். அதன்பிறகு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது ஒரு தொழிலாளி, நீங்கள் மெடிக்கல் லீவ் எடுக்குறீங்களா சார் எனக் கேட்டார். இதற்குப் பதிலளித்த மோடி, தொழிலாளர்களின் வியர்வை வாசனையே எனது மருந்து என்று பதில் அளித்தார். இதனையடுத்து நேற்றிரவு மீண்டும் அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.