53 நாடுகளில் சத்தமே இல்லாமல் செய்த வேலை -அமெரிக்காவின் பிடியில் சீனா சிக்கியது எப்படி?
நியூயார்க்கில் சீனாவின் ரகசிய காவல் நிலையம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சீனாவை சேர்ந்த சென் ஜின்பிங் , லூ ஜியான்வாங், வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு சினாவின் ரகசிய காவல் நிலையம் ஒன்றை நடத்தி வந்ததாக்க அமெரிக்க அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் ,அமெரிக்க அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் அமெரிக்காவில் வாழும் சீனர்களுக்கு ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வந்தது தெரியவந்தது.
சீனா
அதுமட்டுமல்லாமல் சீன அரசுக்கு எதிராகச் செயல்படும் நபர்களை அடையாளம் காணும் ரகசிய காவல்நிலையமாகவும் செயல்பட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சென் ஜின்பிங் , லூ ஜியான்வாங், ஆகியோர் கடந்த 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சீன அரசு சார்பில் 53 நாடுகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட ரகசிய காவல் நிலையம் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.