அதிபராகப் பதவியேற்ற பின் டிரம்ப் எடுக்கும் முதல் நடவடிக்கை இதுதான் - மிரளும் அரசியல் களம்!
குடியுரிமை சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டுவரப்படும் என அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்க உள்ள டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டொனால்டு டிரம்ப்
2025ஆம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்க உள்ளார். அமெரிக்காவின் கொள்கையை மறுவடிவமைப்பு செய்வதில் டிரம்ப் உறுதியோடு உள்ளதாக சர்வதேச அரசியல் களத்தில் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குடியுரிமை சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டு வரப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்,’’நான் அதிபராகப் பதவியேற்ற பின் நான் எடுக்கும் முதல் நடவடிக்கை குடியுரிமை சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டு வரப்படும். சட்டவிரோத குடியேற்றத்தை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கிரீன் கார்டு
முன்னதாக அமெரிக்காவில் குடியேறி தொழில் ரீதியான குடியுரிமை விசா , படிப்பதற்கான குடியுரிமை (விசா) போன்ற தற்காலிக குடியுரிமைகளைப் பெற்று வசிப்பவர்களைத் தவிர்த்து அங்கு நிரந்தர அமெரிக்கக் குடிமகன்களாக இருக்க வேண்டும் என்றால் அயல்நாட்டினர் நீண்ட வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்து கிரீன் கார்டு பெற வேண்டும்.
அப்படி இலையென்றால் அமெரிக்காவில் குழந்தை பிறந்து இருந்தால் எளிதாகக் குடியுரிமை (விசா) கிடைத்துவிடும்.அந்த வகையில் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வசிப்பதில் இந்தியர்கள் மட்டும் 48 லட்சம் பேர் உள்ளனர். இதில் 16 லட்சம் பேர் பிறப்பால் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.