கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகள் லிஸ்ட்.. முதலிடம் எந்த நாடு தெரியுமா ? ஆச்சரியப்படுவீர்கள்!
கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கல்வி
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய முதுகெலும்பாக உள்ளது கல்வி தான். கல்வி ஒரு சொல் அல்ல, அது ஒரு ஆயுதம். குறிப்பாகக் கியூபா, பூடான் போன்ற நாடுகள் கல்வியை இலசவமாக வழங்கி வருகிறது.
ஆனால் நம்மில் பலருக்கு அதிகம் படித்தவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்றால் அமெரிக்கா, பிரான்ஸ் , ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கிறோம்.
இந்த சுழலில், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாடுகள்
அதில், கனடா - 59.96% படித்தவர்கள், ஜப்பான் -52.68%,லக்சம்பர்க் - மூன்றாவது இடத்திலும் , தென் கொரியா நான்காவது இடத்திலும் , இஸ்ரேல் ஐந்தாவது இடத்திலும், உள்ளது. மேலும் அமெரிக்கா ஆறாவது இடத்திலும் ,அயர்லாந்து ஏழாவது இடத்திலும் ,பிரிட்டன் 8வது இடத்திலும் உள்ளது.
இந்த நிலையில், உலகின் கல்வி அறிவு மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 20.4% பேர் மட்டுமே உயர்கல்வி அல்லது பட்டம் பெற்றுள்ளனர்.
மேலும் இந்தியா மட்டுமன்றி உலக அளவில் கேரளா கல்வியில் சிறந்து விளங்குகிறது.மொத்த மக்கள் தொகையில் 39% பேர் பல்கலைக்கழக பட்டப்படிப்பை முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.