அதிவேக Internet Speed..எந்தெந்த நாடுகளில் இருக்கு தெரியுமா? லிஸ்ட் இதோ!
மொபைல் இன்டர்நெட் சேவையை அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியல் குறித்து பார்க்கலாம்.
இன்டர்நெட்
இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்களின் வாழ்க்கை முறையில் இன்டர்நெட் என்பது முக்கிய அங்கமாக உள்ளது.ஆன்லைனில் வேலை வேலை முதல் பள்ளிகளில் நடத்தபடும் வகுப்புகள் வரை இன்டர்நெட் தேவைப்படுகிறது.
அதன்படி, மொபைல் இன்டர்நெட் சேவையை அதிவேகமாக பயன்படுத்தும் நாடுகளின் பட்டியல் வெளியிடபட்டுள்ளது. அதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இன்டர்நெட் ஸ்பீட் 398.51 Mbpsமிக உள்ளதால் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
ஸ்பீட்
2வது இடத்தை பிடித்திருப்பது கத்தார். இங்கு இன்டர்நெட் ஸ்பீட் 344.34 Mbps உள்ளது. 3 வது இடத்தில் குவைத் உள்ளதுஇங்கு மொபைல் இன்டர்நெட் ஸ்பீட் 239.83 Mbps ஆகும். 4 வது இடத்தில் தென் கொரியா உள்ளது.
டிஜிட்டல் துறையில் முன்னணி நாடாக உள்ள தென் கொரியாவில் இன்டர்நெட் ஸ்பீட் 141.23 Mbpsஆக உள்ளது. 5வது இடத்தில் நெதர்லாந்து உள்ளது மொபைல் இன்டர்நெட் ஸ்பீட் 133.44 Mbpsஆகும்.