கல்வி ,மருத்துவம் இலவசம்..ஆனால் இங்கு இன்டர்நெட், டிவி-க்கு தடை - எந்த நாடு தெரியுமா?
பூடானில் இன்டர்நெட், டிவி-க்கு தடை விதிக்கப்பட்டது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
டிவி-க்கு தடை
அமெரிக்கா, சீனா, உள்ளிட்ட நாடுகள் இன்டர்நெட் பயன்பாட்டிற்கு அடுத்த இலக்கை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இனையச் சேவையில் 6 ஜி உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஆனால் பூடான் நாட்டில் இன்டர்நெட், டிவி-க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பூடானை பொறுத்தவரை அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் இலவசமாகச் சிகிச்சை மற்றும் மருந்துகள் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் சில தீவிர நோய்களுக்கு வெளிநாடுகளில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இதற்கான செலவை அரசே ஏற்கிறது.
பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள், காடுகளைப் பாதுகாக்கவும், வேட்டையாடுதலைத் தடுக்கவும் உதவுகின்றனர். முக்கியமாக, பூடான் அரசின் 'தூய்மையான பூடான்' அல்லது 'பசுமை பூடான்' போன்ற தேசிய வளப் பாதுகாப்பு திட்டங்கள் மிகுந்த வீரியத்துடன் செயல்படுத்தப்படுகின்றன.
பூடான்
மேலும் பூடானில் டிவி மற்றும் இணையம் உள்ளது. ஆனால் நீண்ட காலமாக, இந்த 2 சேவைகளும் தடை செய்யப்பட்டன. ஏனெனில் இங்கு வரும் பூடானின் மக்களுக்கு வெளிநாட்டுக் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என பூடான் அரசு தெரிவித்தது.
இதனையடுத்து 1999- ஆம் ஆண்டுக்குப் பின்னர் டிவி மற்றும் இணையத்திற்கு பூடான் அரசு அனுமதி வழங்கி உள்ளது. பூடான் நாட்டில் , கல்வி , கல்லூரிகள், மின்சாரம் , விவசாய கருவிகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.