இந்த ஆண்டில் தான் உலகம் அழியும்? பகீர் கிளப்பும் ஆய்வு முடிவுகள் -ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
உலகம் எப்போது அழியும் என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
உலகம்
உலகம் எப்போது அழியும் என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் சில ஆண்டுகளாகவே ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.உலகம் தற்பொழுது பரிணாம வளர்ச்சி அடைந்து வந்தாலும் இந்த பேச்சு இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஹாலிவுட் படங்களில் உலகம் எப்போது அழியும் குறித்து மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.
குறிப்பாக 2012, டயனோசர்கள் தத்துருபமான காட்சிகள் இடம்பெற்று இருக்கும். மனிதனின் பேராசையால் சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் கெட்டுவருகிறது. இதனால் சூடேரும் பூமி, துருவ பகுதியில் பனிக்கட்டிகள் உருகத் துவங்கியுள்ளன.
அழிவு
கடல் சீற்றம், சுனாமி, விண்கற்கள் மோதுவது நிகழ்வுகள் நடக்க துவங்கியுள்ளன.அதுமட்டுமில்லாமல் சிட்டுக்குருவி, பருந்து போன்ற பறவைகள் அழிந்து போயுள்ளது. சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில்,’’உலகின் அழிவு குறித்து இப்போது நாம் கவலைப்படத் தேவையில்லை.
ஏனென்றால், இந்த நிகழ்வு 250 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் என விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். அப்படிப்பார்த்தால், 25 லட்சம் கோடி ஆண்டுகளுக்கு பிறகே இந்த நிகழ்வு நடக்கும் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.