டாப் லிஸ்ட்டில் தமிழக உணவு..உலகளவில் மக்கள் ரசித்து சாப்பிடும் உணவு இதுதான்!
உலகளவில் மக்கள் அதிக அளவில் ரசித்துச் சாப்பிடும் தமிழக உணவு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழக உணவு
உலகிலுள்ள ஒவ்வொரு நாடுகளுக்கு வெவ்வேறு விதமான உணவு வகைகள் உள்ளன. குறிப்பாக இந்தியாவில் உள்ள அனைவரும், விரும்பி உண்ணக் கூடிய வரிசையில் முதல் இடத்தில் கோழி இறைச்சி உள்ளது.
ஆனால் இது உலகளவில் 2வது இடத்தில் உள்ளது. இதை 33 சதவீத மக்கள் சாப்பிடுகின்றனர். இதில் ஊட்டச்சத்து கோழியில் புரதம் , நியாசின், செலினியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
டாப் லிஸ்ட்
அந்த வகையில் அட்லஸ் நிறுவனம், உலகளவில் மக்களால் ரசித்துச் சாப்பிடக்கூடிய உணவுகளை வகை பிரித்து தரவரிசைப் பட்டியல் ஒன்றி வெளியிட்டுள்ளது.
அதில் வறுத்த சிக்கன் உணவுகளுக்கான டாப் டென் பட்டியலில், தமிழ்நாட்டில் அறிமுகமானதாகக் கூறப்படும் சிக்கன் 65 உணவும் இடம்பெற்றுள்ளது. இது உலகளவில் 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.