மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் இறைச்சி எது தெரியுமா? உலக அளவில் இதுதான் டாப்!
உலகம் முழுவதும் அதிக மக்களால் விரும்பி சாப்பிடும் இறைச்சி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இறைச்சி
உலகிலுள்ள ஒவ்வொரு நாடுகளுக்கு வெவ்வேறு விதமான உணவு வகைகள் உள்ளன. ஒருவருக்குப் பிடித்த உணவு இன்னொருவருக்குப் பிடிக்காது.அது போலச் சிலர் சைவம் மட்டுமே சாப்பிடுகின்றனர். பலர் சைவம், அசைவம் என இரு வகை உணவுகளையும் சாப்பிடுகின்றனர்.
இந்த உணவில் ஆரோக்கியம் ,சத்தான உணவு ,ஊட்டச்சத்து வைட்டமின்கள் , தாதுக்கள் நிறைந்தவையாக உள்ளது. அந்த வகையில் உலகம் முழுவதும் இறைச்சி உண்பவர்களில் 36 சதவீதம் பேர் வெண்பன்றி இறைச்சியை உட்கொள்கிறார்கள்.
இதுதான் டாப்
வெண்பன்றி முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள அனைவரும், விரும்பி உண்ணக் கூடிய வரிசையில் முதல் இடத்தில் கோழி இறைச்சி உள்ளது. ஆனால் இது உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதை 33 சதவீத மக்களால் உட்கொள்ளப்படுகிறது.
வெண்பன்றி, கோழி இறைச்சிக்கு அடுத்ததாக உள்ளது மாட்டிறைச்சி. உலகம் முழுவதும் 24 சதவீதம் பேர் மட்டுமே உட்கொள்கிறார்கள். கோழி, வெண்பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி , மீன் ஆகியவற்றை ஒப்பிடும்போது விலை உயர்ந்த இறைச்சியாக இருப்பது ஆட்டிறைச்சி. இது ஐந்தாவது பெரிய இறைச்சியாக இருக்கிறது.