1 தொகுதி தான் அதுவும் தாமரை சின்னம் தான்..? உறுதியாக இருக்கும் பாஜக..ஏற்பாரா ஓபிஎஸ்..?
மக்களவை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளது.
மக்களவை தேர்தல்
நடக்கவிருக்கும் மக்களவை தேர்தல் குறித்தான பேச்சுவார்த்தைகள் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமாவிற்கு 10 இடம், அமமுகவிற்கு 2 இடம், புதிய நீதி கட்சிக்கு 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஓபிஎஸ் அணியின் தொகுதி பங்கீடு நீடித்து வருகின்றது.
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மட்டுமே கடந்த முறை அதிமுக தரப்பில் மக்களவை வேட்பாளராக தேர்வாகினார். இம்முறையும் அவருக்கு வழங்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், சின்னம் இல்லாத சூழலில் கடந்த சில காலமாகவே ஓபிஎஸ் அணி தாமரை சின்னத்தில் தான் போட்டியிடும் என்ற கருத்துக்களும் தொடர்ந்து விவாதிகப்படுகிறது. இந்த சூழலில் தான் தற்போது மற்றுமொரு தகவல் வெளிவந்துள்ளது.
ஏற்குமா..?
அதாவது, பாஜக தரப்பில் ஓபிஎஸ் அணிக்கு 1 இடம் மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் தரப்பில் தேனி, தஞ்சாவூர் என இரண்டு தொகுதிகள் கேட்கப்பட்டதாக கூறப்படும் சூழலில், இது ஓபிஎஸ் அணிக்கு அதிர்ச்சியையே கொடுக்கும்.
அதே போல, தாமரை சின்னத்தில் தான் போட்டியிடவேண்டும் என பாஜக கடுமையாக வற்புறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாஜக தரப்பில் வைக்கப்படும் இந்த கோரிக்கைகளை ஓபிஎஸ் தரப்பு ஏற்குமா..? என்ற கேள்விகள் அதிகளவில் எழுந்துள்ளது