Star தொகுதியாகும் தென் சென்னை - தமிழச்சி vs ஜெயவர்தன் vs தமிழிசை..?
இன்று திமுக - அதிமுக கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தென் சென்னை தொகுதி சிறப்பு கவனத்தை பெற்றுள்ளது.
தென் சென்னை
சென்னையின் 3 மக்களவை தொகுதிகளில் ஒன்று தென் சென்னை. தலைநகர் சென்னை தொகுதிகளில் எப்போது ஆதிக்கம் செலுத்துவே கட்சிகள் அனைத்தும் முயற்சிக்கும். அந்த காரணமாக இங்கு பல நட்சத்திர வேட்பாளர்கள் களம் காணுவார்கள்.
சென்னையின் முக்கிய பகுதிகளான விருகம்பாக்கம், சைதாபேட்டை, தியாகராய நகர், மைலாப்பூர், வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தென் சென்னை மக்களவை தொகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன் 2,62,223 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் ஜெயவர்தனை விட அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.
அதே நேரத்தில், 2014-ஆம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதியில் இருந்து தான் ஜெயவர்தன் மக்களவை உறுப்பினராக தேர்வாகினார்.
இந்த சூழலில் தான் இவர்கள் இருவருமே தற்போது மீண்டும் போட்டியிடுகிறார்கள்.
வேட்பாளர்கள் இவர்கள் தான் அதிகாரபூர்வகமாக அதிமுக - திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக தரப்பில் தென் சென்னை வேட்பாளராக தமிழிசை சௌந்தரராஜன் களமிறங்குவார் என செய்திகள் வெளிவந்துள்ளன.
இது வரை தேர்தல் வெற்றியை தமிழிசை பெறவில்லை என்றாலும், அவரின் அரசியல் செல்வாக்கு கடந்த சில ஆண்டுகளில் பெரிதாக உயர்ந்துள்ளது.
அவரும் இந்த தொகுதியில் போட்டியிடுவது உறுதியானால், தென் சென்னை தமிழகத்தில் நட்சத்திர தொகுதியாக மாறிவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.