Star தொகுதியாகும் தென் சென்னை - தமிழச்சி vs ஜெயவர்தன் vs தமிழிசை..?

Smt Tamilisai Soundararajan ADMK DMK D. Jayakumar Election
By Karthick Mar 20, 2024 04:13 PM GMT
Report

இன்று திமுக - அதிமுக கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தென் சென்னை தொகுதி சிறப்பு கவனத்தை பெற்றுள்ளது. 

தென் சென்னை

சென்னையின் 3 மக்களவை தொகுதிகளில் ஒன்று தென் சென்னை. தலைநகர் சென்னை தொகுதிகளில் எப்போது ஆதிக்கம் செலுத்துவே கட்சிகள் அனைத்தும் முயற்சிக்கும். அந்த காரணமாக இங்கு பல நட்சத்திர வேட்பாளர்கள் களம் காணுவார்கள்.

southchennai-to-have-tough-fight-btw-admk-dmk-bjp

சென்னையின் முக்கிய பகுதிகளான விருகம்பாக்கம், சைதாபேட்டை, தியாகராய நகர், மைலாப்பூர், வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தென் சென்னை மக்களவை தொகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன் 2,62,223 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் ஜெயவர்தனை விட அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.

southchennai-to-have-tough-fight-btw-admk-dmk-bjp

அதே நேரத்தில், 2014-ஆம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதியில் இருந்து தான் ஜெயவர்தன் மக்களவை உறுப்பினராக தேர்வாகினார்.

தேர்தல் அரசியலுக்கு வந்த தமிழிசை சௌந்தரராஜன் - இது வரை தேர்தல் வரலாறு என்ன..?

தேர்தல் அரசியலுக்கு வந்த தமிழிசை சௌந்தரராஜன் - இது வரை தேர்தல் வரலாறு என்ன..?

இந்த சூழலில் தான் இவர்கள் இருவருமே தற்போது மீண்டும் போட்டியிடுகிறார்கள்.

southchennai-to-have-tough-fight-btw-admk-dmk-bjp

வேட்பாளர்கள் இவர்கள் தான் அதிகாரபூர்வகமாக அதிமுக - திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக தரப்பில் தென் சென்னை வேட்பாளராக தமிழிசை சௌந்தரராஜன் களமிறங்குவார் என செய்திகள் வெளிவந்துள்ளன.

southchennai-to-have-tough-fight-btw-admk-dmk-bjp

இது வரை தேர்தல் வெற்றியை தமிழிசை பெறவில்லை என்றாலும், அவரின் அரசியல் செல்வாக்கு கடந்த சில ஆண்டுகளில் பெரிதாக உயர்ந்துள்ளது. அவரும் இந்த தொகுதியில் போட்டியிடுவது உறுதியானால், தென் சென்னை தமிழகத்தில் நட்சத்திர தொகுதியாக மாறிவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.