கருப்பு பூனை குறுக்கே போனால் அது அபசகுணமா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
பூனை குறுக்கே நடந்து சென்றால் என்ன நடக்கும் என்று காணலாம்.
கருப்பு பூனை
நாம் வெளியே செல்லும்போது திடீரென பூனை குறுக்கே சென்றாலோ, அல்லது பூனையை பார்த்தாலோ அது கேட்ட சகுணமாக கருதப்படுகிறது. பிறகு உடனடியாக நின்றுவிட்டு சிறிது நேரம் கழித்து செல்லவேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுவதுண்டு. ஏனென்றால் பூனைகள் சில சமயங்களில் அபசகுணமாக பார்க்கப்படுகிறது.
பழைய நம்பிக்கைகளின்படி, பூனைகள் வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலைக் கொண்டு வருகின்றன. எனவே வீட்டில் பூனை இருப்பது நல்லதல்ல என சொல்லப்பட்டது. பூனை இடமிருந்து வலமாக நகர்ந்தால், அது மோசமான அறிகுறி என்று பலர் கருதினர். ஒருவேளை வலமிருந்து இடமாக நகர்ந்தால் அது மங்களகரமானதாக பார்க்கப்பட்டது.
அபசகுணமா?
மேலும் ஒரு பூனையின் அழுகை கூட சாதகமற்றதாக பார்க்கப்பட்டது. இது இந்தியாவில் மட்டுமல்ல பல நாடுகளிலும் பூனையை கேட்ட சகுணமாக கருதுகின்றனர். குறிப்பாக கருப்பு பூனை குறுக்கே வந்தால் உடனடியாக வாகனத்தை நிறுத்தி விடும் பழக்கம் நம்மவர்களிடையே அதிகம் காணப்படுகிறது.
ஏனென்றால் கருப்பு சனி பகவானுக்கு உகந்தது என்பதால் தீமை ஏற்பட்டு விடும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் உண்மையில் பூனையைப் பார்ப்பது துரதிர்ஷ்டமா என்ற கேள்விக்கு அறிவியல் கூற்றுப்படி, முற்காலத்தில் மக்கள் மாடு வண்டிகளில் செல்வதால்,
பூனை குறுக்கே சென்றால் மாடு பயந்துவிடும் என்பதால் மக்கள் வண்டியை நிறுத்திவிட்டு சிறுது நேரம் கழித்து செல்வார்கள். இது தான் நாளடைவில் மூடநம்பிக்கையாக மூட நம்பிக்கையாக உருமாறி தற்போது கெட்ட சகுணமாக பார்க்கப்படுகிறது.