கணவர் மீது பாய்ந்த கழுதைப்புலிகள் - போராடி உயிரைக் காப்பாற்றிய மனைவி!
கணவரை கழுதைப்புலிகளிடம் இருந்து மனைவி காப்பாற்றியுள்ளார்.
கழுதைப்புலிகள்
சத்தீஷ்கர், கொண்டகாவன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நந்து யாதவ். இவர் தன்னுடைய வயல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த வழியே கழுதைப்புலிகள் கூட்டம் ஒன்று வந்துள்ளது.
தொடர்ந்து இவரைப் பார்த்ததும் இவர் மீது பாய்ந்துள்ளது. இதனால் அவர் அலறியுள்ளார். உடனே அவரது சத்தம் கேட்டு விரைந்த நந்துவின் மனைவி சுக்னி அவரை பிடித்து இழுக்க முயன்றுள்ளார். ஆனால் கழுதைப்புலிகள் அவரை விடாமல் தாக்கி கொண்டிருந்தன.
போராடிய மனைவி
அதன்பின், அங்கு கிடந்த பெரிய தடி ஒன்றை எடுத்து கழுதைப்புலிகளில் ஒன்றின் மீது தாக்கியுள்ளார். மேலும், அது உயிரிழக்கும் வரை தலையிலேயே அடித்துள்ளார். இதனையடுத்து அது உயிரிழந்த நிலையில், கைகள், கால்கள் மற்றும் இடுப்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்ட கணவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.
இதில், உயிரிழந்த கழுதைப்புலிக்கு பிரேத பரிசோதனை செய்து வன துறை அதிகாரிகள் அதனை அடக்கம் செய்தனர்.
கணவனை துணிச்சலாக காப்பாற்றிய மனைவிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.