7 மாத குழந்தையை வாயில் கவ்விய சிறுத்தை - தாய் என்ன செய்தார் தெரியுமா?

Maharashtra
By Sumathi Oct 16, 2023 05:10 AM GMT
Report

சிறுத்தையிடம் சிக்கிய 7 மாத குழந்தையை தாய் காப்பாற்றியுள்ளார்.

சிக்கிய குழந்தை

மகாராஷ்டிரா, ஜுன்னர் வனப்பகுதியை அடுத்த தார்ன் டேல் கிராமத்தைச் சேர்ந்தவர் சோனல் கார்கல். இந்த பெண் ஆடு வளர்க்கிறார். சம்பவத்தன்று, கிராமத்துக்கு அருகே உள்ள திறந்தவெளி நிலப்பகுதியில்

7 மாத குழந்தையை வாயில் கவ்விய சிறுத்தை - தாய் என்ன செய்தார் தெரியுமா? | Mother Saves 7 Month Old Baby From Leopard Pune

இரவு நேரத்தில் ஆடுகளை பட்டியில் அடைத்துள்ளார். மேலும், அங்கேயே தனது 7 மாத குழந்தை மற்றும் கணவருடன் தூங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, நள்ளிரவில் அருகில் உள்ள வனப்பகுதியிலிருந்து வந்த

5 வயது சிறுவனை வாயில் கவ்விக் கொண்டு ஓடிய சிறுத்தை - யாத்திரையில் பரபரப்பு!

5 வயது சிறுவனை வாயில் கவ்விக் கொண்டு ஓடிய சிறுத்தை - யாத்திரையில் பரபரப்பு!

காப்பாற்றிய தாய்

ஒரு சிறுத்தை குழந்தையை வாயில் கவ்விக் கொண்டு இழுத்துச் செல்ல முயன்றுள்ளது. இதனால் கதறிய குழந்தையின் அழுகுரலைக் கேட்டு தாய் எழுந்து பார்த்ததில் அதிர்ச்சியடைந்துள்ளார்.

7 மாத குழந்தையை வாயில் கவ்விய சிறுத்தை - தாய் என்ன செய்தார் தெரியுமா? | Mother Saves 7 Month Old Baby From Leopard Pune

உடனே, கூச்சலிட்டு கற்களை எடுத்து வீசி உள்ளார். இதனால், சிறுத்தை குழந்தையை விட்டுவிட்டு வயலுக்குள் தப்பி ஓடிவிட்டது. அதன்பின் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.