5 வயது சிறுவனை வாயில் கவ்விக் கொண்டு ஓடிய சிறுத்தை - யாத்திரையில் பரபரப்பு!
5 வயது சிறுவனை சிறுத்தை வாயில் கவ்விக் கொண்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாத்திரை
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அதன் வரிசையில், கர்னூலை சேர்ந்த குடும்பத்தினர் தங்களது 3 வயது மகன் கவுசிக்குடன் அலிப்பிரி நடைபாதையில் நடந்து சென்றுள்ளனர்.
அப்போது, 7வது மைலில் சென்றபோது திடீரென வனப்பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தை பாய்ந்து சிறுவன் கவுசிக்கை கவ்வி இழுத்துச் சென்றுள்ளது. அதில் பெற்றோரும், பக்தர்களும் அலறியுள்ளனர். அந்த நேரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் சிறுத்தையை விரட்டினர்.
சிறுவனை கவ்விய சிறுத்தை
அதில் சிறுத்தை சிறுவனை கீழே போட்டுவிட்டு வனப்பகுதிக்குள் தப்பி சென்றது. அதில் படுகாயமடைந்த சிறுவனை உடனே மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து, சிறுத்தை தப்பி சென்ற பாதையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி
சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் வனப்பகுதிக்குள் தப்பி சென்ற சிறுத்தையை பிடித்து வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவில் அடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.