சிறுத்தையுடன் மல்லுக்கட்டி வென்று, பைக்கில் தூக்கி சென்ற இளைஞர் - குவியும் பாராட்டு!

Viral Video Karnataka
By Vinothini Jul 15, 2023 06:55 AM GMT
Report

 கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் சிரத்தையுடன் சண்டை போட்டு அதனை பைக்கில் தூக்கி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

துணிச்சல்மிக்க இளைஞர்

கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ள பாகிவலு என்ற பகுதியில் முத்து என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது பண்ணையில் இருந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது அப்பகுதிக்கு அருகே உள்ள வனப்பகுதி ஒன்றில் இருந்த சிறுத்தை இவரை தாக்க தொடங்கியுள்ளது.

man-fights-with-leopard-and-tied-in-his-bike

அப்பொழுது இவர் முதலில் விரட்ட முயன்றுள்ளார், ஆனால் அது ஆக்ரோஷமாக தாக்கியுள்ளது. முதலில் தடுக்க முயன்ற அவர் பின்னர் அதனை தாக்க தொடங்கினார்.

வைரல் வீடியோ

இந்நிலையில், அவர் அந்த சிறுத்தையுடன் கட்டி புரண்டு சண்டையிட தொடங்கினார். பிறகு வேகத்துடன் தாக்கிய அந்த சிறுத்தையை அடக்கி அவர் வைத்திருந்த கயிற்றினால் கட்டி தனது பைக்கில் ஏற்றி கிராமத்திற்குள் சென்றுள்ளார்.

man-fights-with-leopard-and-tied-in-his-bike

சிரத்தையுடன் பார்த்த ஊர் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவர் சண்டையிடும்போது சிறுத்தை அவரை தாக்கியுள்ளது, இதனால் ஊர் மக்கள் அவரை முதலுதவிக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையை மீட்டு கண்டாசி கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். மேலும், இது தொடர்பான வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் இந்த இளைஞரின் செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.