கர்நாடகா தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது - அண்ணாமலை பரபரப்பு தகவல்!
கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ள நிலையில் அண்ணாமலை வெளியிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல்
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. வாக்குப்பதிவுகள் எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் காட்சிகள் பெரும் எதிர்பார்புடன் இருக்கிறது, இதில் அதிகபட்ச வாக்குகள் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கு போடப்பட்டுள்ளது என்று கருது கணிப்புகளில் தெரியவந்துள்ளது.
தென்னிந்தியாவில் பாஜக நேரடியாக ஆட்சியில் இருக்கும், ஒரே மாநிலம் கர்நாடகாதான். இதனால் தென்னிந்தியாவில் மீண்டும் இதே மாநிலத்தை கைப்பற்றுவதில் பாஜக குறியாக உள்ளது.
கர்நாடக அரசியல் 2024 லோக்சபா தேர்தல், தென்னிந்திய அரசியலை நிர்மாணிக்கும் என்பதால் இந்த தேர்தல் முடிவுகள் அதிக கவனம் பெற்றுள்ளது.
அண்ணாமலை பேட்டி
இந்நிலையில், அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என கட்சியின் மாநில தேர்தல் இணை பொறுப்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், "கர்நாடகாவில் 1985-க்கு பிறகு ஆளும் கட்சியாக இருக்கும் கட்சி தேர்தலில் வெற்றிப் பெறாது, பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்ற எழுதப்படாத விதியை பாஜக இம்முறை உடைக்கும்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைத்தாலும் ஒரு முறை கூட பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை தனித்து வென்றது இல்லை.
இந்த வரலாற்றை பாஜக இப்போது மாற்றும். கர்நாடகாவில் பாஜக 130-க்கும் அதிகமான இடங்களில் வெற்றிப்பெறும் மற்றவர்கள் ஆதரவையும் கேட்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை" என்று கூறியுள்ளார்.