தாம்பத்ய உறவை தவிர்த்த மனைவி - கணவனுக்கு நீதிபதி கொடுத்த அதிரடி தீர்ப்பு!
பாலியல் உறவு குறித்த வழக்கு ஒன்றில் அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாலியல் உறவு
டெல்லியில் ஒரு தம்பதியிடையே பாலியல் உறவு தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டதால், கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்துள்ளது. தொடர்ந்து மனைவி தாம்பத்ய உறவை தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் கணவன் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதில் மனைவி தரப்பில் பாலுறவு என்றாலே அச்சத்துக்கு ஆளாகும் ஜீனோபோபியா என்ற நோய் இருப்பதாகவும், கணவருக்கு விவாகரத்து தர முடியாது என்றும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு
ஆனால், வழக்கை விசாரித்த டெல்லி குடும்பநல நீதிமன்றத்தின் நீதிபதி விபின் குமார் ராய், மனைவி தரப்பின் வாதத்தை ஏற்கவில்லை.
மேலும், கணவன் - மனைவி இருவரில் ஒருவர் மற்றவருக்கு அதனை மறுப்பது மனரீதியிலான கொடுமை செய்வதற்கு இணையானது.
மகிழ்வான மற்றும் நிறைவான குடும்ப வாழ்க்கைக்கு அவசியமான பாலுறவை வேண்டுமென்றே தவிர்ப்பது குடும்ப அமைதியை குலைக்கும் எனக் கூறி கணவர் தரப்பில் கோரிய விவாகரத்தினை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.