வீட்டு கதவை தட்டி பாலியல் உறவுக்கு அழைத்த நபர் - அலறிய பெண்!
பெண்கள் இருந்த வீட்டு கதவைத் தட்டிய இளைஞரை பொதுமக்கள் கட்டி வைத்து அடித்துள்ளனர்.
பாலியல் தொழில்
கரூர், நல்லதங்கால் ஓடைத் தெருவில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெண்கள் வீட்டில் இருந்த நிலையில், இளைஞர் ஒருவர் அங்கிருந்த வீட்டின் கதவை தட்டியுள்ளார். தொடர்ந்து, பெண்ணிடம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகவும் தான் வழக்கமாக வந்து செல்லும் பாலியல் தொழிலாளியின் வீடு தானே இது எனவும் கேட்டுள்ளார்.
உதைத்த பொதுமக்கள்
உடனே அப்பெண் கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி அந்த நபரை பிடித்து மின் கம்பம் ஒன்றில் கட்டி வைத்து அடித்துள்ளனர். தகவல் அறிந்து உடனே விரைந்த போலீஸார், அந்த இளைஞரை மீட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
[
விசாரணையில், நாமக்கல் வரவனை பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (35). திருமணமாகாத இவர் அடிக்கடி கரூருக்கு வருகை தந்துள்ளார். அப்போது பாலியல் தொழிலாளி ஒருவரின் தொடர்பு கிடைத்து, அவருக்கு செல்போன் மூலம் அழைத்த போது,
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள வீட்டிற்கு வருமாறு அந்த பெண் கூறியுள்ளார். இதனை அடுத்து சதீஷ்குமார் மது போதையில் அங்கு வந்தபோது, வீடு மாறி சென்றதால் இந்த குழப்பம் நேர்ந்தது தெரியவந்தது.