சிறுமியை வைத்து பாலியல் தொழில் - ஓய்வுபெற்ற எஸ்.ஐ உடந்தை!

Tamil nadu Child Abuse Crime
By Sumathi Dec 21, 2022 11:22 AM GMT
Report

சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்த வழக்கில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ உள்ளிட்ட 9பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொடூரம்

கரூர் அருகே தொழிற்பேட்டை பகுதியில் சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக பொதுமக்கள் மூலமாக குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார் சென்றுள்ளது. அதன் அடிப்படையில், தனிப்படை குழு அமைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ரகசிய விசாரணையை மேற்கொண்டனர்.

சிறுமியை வைத்து பாலியல் தொழில் - ஓய்வுபெற்ற எஸ்.ஐ உடந்தை! | Retired Si Arrest For Sexual Harrassment

இதில், மூன்று பெண் புரோக்கர்கள், ஐந்து இளைஞர்கள் உட்பட 8 பேரிடம் விசாரணை தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சாந்தி (42), மேகலா (42), மாயா (45) ஆகிய மூன்று பெண் புரோக்கர்கள், கார்த்தி (28), கார்த்திகேயன்(27), சந்தோஷ் (30), தன்னாசி என்ற சமுத்திரபாண்டி (27),

கௌதம் (30) உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். மேலும், சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் மோகன் என்பவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.