புதுமண தம்பதி; பாலியல் உறவுக்கு மறுத்த மனைவி - ஆசை கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
காதலித்து திருமணம் செய்துகொண்ட நபரின் மனைவி பெண் அல்ல ஆண் என தெரியவந்ததது.
புதுமண தம்பதி
இந்தோனேசியாவை சேர்ந்த ஒருவர்(26) சமூக வலைதளம் மூலமாக அடிந்தா கான்சா என்பவருடன் பழகி வந்துள்ளார். ஆரம்பத்தில் நட்பாக பழகிய இவர்கள், ஒரு கட்டத்தில் டேட்டிங் செய்யலாம் என முடிவெடுத்துள்னனர். ஒவ்வொரு முறையையும் சந்திக்கும்போது அடிந்தா கான்சா, இஸ்லாமியர்கள் அணியும் புர்காவை அணிந்து,
முகத்தை மறைத்து வந்திருக்கிறார். இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அந்த இளைஞர் அவரது மதத்தை மதிக்கும் வகையில் எந்த கேள்வியும் கேட்கவில்லை. இந்த சூழலில் காதல் வளர் இருவரும் திருமணம் செய்ய நினைத்தனர். அப்போது அடிந்தா, தனக்கு சொந்தம் உறவு இல்லை என கூறியதனால்
இளைஞரின் உறவுகளுடன் மட்டும் கொண்டு எளியமுறையில் மணந்துகொண்டனர். இதன் பிறகு, ஆசையாக கணவன் அருகில் வரும் போதெல்லாம் முகத்தையும் உடலையும் மறைத்தே வைத்திருந்தார், அடிந்தா. யாருடனும் பேசாமல், கணவருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளாமல் சாக்குபோக்கு சொல்லி தவிர்த்து வந்துள்ளார்.
கணவருக்கு அதிர்ச்சி
தொடக்கத்தில் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தாலும் இளைஞருக்கு ஒரு கட்டத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. திருமணத்தின் போது பெற்றொர்கள் இறந்து விட்டதாக கூறியிருந்தார். ஆனால், உண்மையில் அவரது பெற்றோர் உயிருடன் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார் இளைஞர்.
அவர்களிடம் அடிந்தா குறித்து கேட்டபோது தான் பல திடுக்கிடும் தகவல் வந்தது. அடிந்தா, பெண்ணே இல்லை என்ற விஷயத்தை அவரது பெற்றோர், ஏகேவிடம் கூறியிருக்கின்றனர். அவர், 2020ஆம் ஆண்டு முதல் பெண்ணுக்குரிய ஆடைகளை அணிந்து தன்னை பெண் என அடையாள படுத்திக்கொள்வதாகவும் கூறியிருக்கின்றனர்.
தை கேட்டு அதிர்ந்து போன இளைஞர் சற்றும் தாமதிக்காமல் காவலர்களுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். புகாரின் பேரில், போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெண் குரலில் பேசியதாகவும், கொஞ்சம் விட்டிருந்தால் காவலர்களே அவர் ஒரு பெண் என நம்பியிருப்பர் என்றும் கூறப்படுகிறது.
இறுதியாக, இளைஞரின் சொத்துகளை திருடுவதற்காகத்தான் பெண் வேடம் அணிந்து கொண்டு இப்படி நாடகமாடியதாக அடிந்தா கூறியிருக்கிறார். இந்த மோசடி பேர்வழிக்கு 4 வருட ஜெயில் தண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது.