கணவருக்கு தெரியாமல் மனைவி வாங்கிய ஸ்மார்ட்போன் - கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி

husbandtriestokillwife kolkatta
By Petchi Avudaiappan Jan 24, 2022 07:56 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

 தனக்கு தெரியாமல் ஸ்மார்ட் போன் வாங்கிய மனைவியை கணவன் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்குவங்க மாநிலம்  கொல்கத்தா அருகே உள்ள நரேந்திரபூரை சேர்ந்தவர் 40 வயதான ராஜேஷ் என்பவரின் மனைவி பல மாதங்களாக ஸ்மார்ட் போன் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர் வீட்டில் இருக்கும் உனக்கு எதற்கு இப்போது ஸ்மார்ட் போன் பிறகு வாங்கி தருவதாக பல முறை தட்டி கழித்துள்ளார்.

ராஜேஷின் மனைவி அப்பகுதியில் இருக்கும் குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்கவும் தொடங்கியுள்ளார். அதில் வரும் பணத்தை சேமித்து கடந்த 1 ஆம் தேதி கணவனிடம் சொல்லாமல் கடைக்கு சென்று புதிய ஸ்மார்ட் போனை அவர் வாங்கியுள்ளார். இதனை அறிந்த ராஜேஷ் ஆத்திரத்தில் இருந்துள்ளார். 

மேலும் தனக்கு தெரியாமல் மனைவி ஸ்மார்ட் போன் வாங்கிய காரணத்தால் அவரை கொலை செய்வதற்காக கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளார். இதனிடையே கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு வீட்டின் கதவை மூடி விட்டு வருவதாக கூறி விட்டு சென்ற ராஜேஷ் நீண்ட நேரமாகியும் வரவில்லையாம். கணவன் வெகு நேரமாகியும் வரததால் சந்தேகம் அடைந்த மனைவி வெளியே சென்று பார்த்துள்ளார்.

அப்போது ராஜேஷ் ஏற்பட்டு செய்த இரு மர்ம நபர்கள் இருட்டில் மறைந்திருந்த நிலையில் அப்பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த அவர், உதவி கேட்டு அலறியுள்ளார். மேலும், அந்த மர்ம நபர்கள் அந்த பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். 

பெண்ணின் அலறல் கேட்டு அப்பகுதியில் நடந்த விருந்து ஒன்றில் கலந்து கொண்ட சிலர் ஓடி வந்த நிலையில் மர்ம நபர்கள் இருவரும் ஓடி விட்டனர். அதோடு அப்பெண்ணை காப்பற்றிய அவர்கள்  மருத்துவமனையில் சேர்த்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொண்டையில் 7 தையல்கள் போடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸ் நடத்திய விசாரணையில் தாக்குதல் நடத்திய நிலையில் கூலி படையை சேர்ந்த 2 பேரில் ஒருவர் சிக்கியுள்ளார்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரான ராஜேஷ் தனது மனைவியை கொல்வதற்கு போட்ட சதி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கணவர் ராஜேஷ் கைது செய்யப்பட்டார்.