ஆற்றில் கணவனை தள்ளிவிட்ட மனைவி? விசாரணையில் திடீர் ட்விஸ்ட்!
மனைவி செல்பி எடுக்க அழைத்து சென்று, கணவனை ஆற்றில் தள்ளிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கணவர் குற்றச்சாட்டு
கர்நாடகா, ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாத்தப்பா. அவர் தனது மனைவியுடன் கடலூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கு, கிருஷ்ணா ஆற்றினை வேடிக்கை பார்க்க கணவன் மனைவி இருவரும் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது தாத்தாப்பா பாலத்தின் மீது ஏறி நின்று செல்பி எடுக்க முயன்றுள்ளார்.
திடீரென்று பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர், நீரோட்டத்தில் வேகமாக இழுத்துச் செல்லப்பட்டார். இதில் அதிர்ஷ்டவசமாக நதியின் நடுவே இருந்த பாறையின் மீது ஏறி சத்தமிட்டுள்ளார்.
மனைவி மறுப்பு
உடனே, உள்ளூர் இளைஞர்கள் கயிறு ஒன்றுடன் ஓடி வந்து அந்த கயிற்றை நதியில் வீசி காப்பாற்றினர். அப்போது மேலே வந்தவர், திடீரென்று செல்பி எடுக்க முயன்றபோது, தன்னை கொலை செய்யும் நோக்கில் மனைவிதான், தன்னை ஆற்றில் தள்ளி விட்டதாகக் கூறினார்.
ஆனால் தான் அப்படி செய்யவில்லை. இது தவறுதலாக நடந்த விபத்து என்று கூறி மனைவி விளக்கமளித்துள்ளார். பின் தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார், தம்பதியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.