கட்டுப்பாட்டை மீறி காதல் - இளம் ஜோடியை ஏரில் பூட்டி நிலத்தை உழவைத்த கொடூரம்!

Marriage Viral Photos Odisha
By Sumathi Jul 12, 2025 04:23 PM GMT
Report

 காதல் திருமணம் செய்த இளம்ஜோடியை, ஏரில் பூட்டி நிலத்தை உழ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 காதல் திருமணம்

ஒடிசா, கஞ்சமாஜிரா கிராமத்தைச் சேர்ந்த இளைஞனும் இளம்பெண்ணும், காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கட்டுப்பாட்டை மீறி காதல் - இளம் ஜோடியை ஏரில் பூட்டி நிலத்தை உழவைத்த கொடூரம்! | Village Couple Tortured For Love Marriage Odisha

ஆனால், அந்த நபர் அந்தப் பெண்ணின் தந்தைவழி அத்தையின் மகன் என்பதால் சில கிராமவாசிகள் அவர்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திடீரென மருத்துவமனையில் குவிந்த 1000+ பேர் - மாரடைப்பால் அச்சம்

திடீரென மருத்துவமனையில் குவிந்த 1000+ பேர் - மாரடைப்பால் அச்சம்

கிராமத்தினர் கொடூரம்

உள்ளூர் பழக்கவழக்கங்களின்படி இதுபோன்ற திருமணம் தடைசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, கிராமத்தினர் இருவரையும் கலப்பையில் பூட்டி உழச்செய்ததோடு, பிரம்பால் தாக்கவும் செய்துள்ளனர்.

பின் கோவிலுக்கு அழைத்துச் சென்று பரிகார பூஜை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அறிந்த போலீஸார் நேரடியாக அக்கிராமத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி கடும் கண்டத்திற்குள்ளாகியுள்ளது.