டீ மாஸ்டர் மனைவியுடன் கள்ளக்காதல்.. பால்காரருடன் சேர்ந்து கணவருக்கே ஸ்கெட்ச் - கொடூரம்!
இளைஞர் ஒருவர் டீ மாஸ்டரின் மனைவியுடனான கள்ளகாதலால் அவரை கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரை சேர்ந்தவர் மாரியப்பன் 41 வயதான இவர் டீ மாஸ்டராக உள்ளார். இவரது மனைவி கனகா, இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு மாரியப்பன் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார், பிறகு வெகு நேரமாகியும் இவர் வீடு திரும்பவில்லை.
இவர் புளியங்குடி பகுதிக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தார். அந்த வழியாக சென்ற மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், இதனை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கள்ளக்காதல்
இந்நிலையில், போலீசார் விசாரணையில் மாரியப்பனின் மனைவிக்கு கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது. அதனால் வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்த 24 வயதான விக்னேஷ் என்பவரை விசாரித்தனர். அப்பொழுது இவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் விசாரணையில், இவர் பால் விற்பனை செய்து வந்துள்ளார்.
அப்போது அவருக்கும் மாரியப்பனின் மனைவி கனகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியுள்ளது. தனது கணவர் இல்லாத பொழுது இருவரும் சேர்ந்து உல்லாசமாக இருந்துவந்துள்ளனர்.
ஒருகட்டத்தில் மாரியப்பனுக்கு தெரியவந்ததும், அவர் கண்டித்துள்ளார். பிறகு இவர்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்ய திட்டமிட்ட மனைவி அவர் கிளம்பியதும் விக்னேஷுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் பின்தொடர்ந்து சென்று அவரை கம்பியால் தாக்கி அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். மேலும், போலீசார் இவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.