கள்ளகாதலால் கர்ப்பமான பெண் - திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கொன்று வீசிய காதலன்!
உத்திர பிரதேசத்தில் கள்ளகாதலனால் கர்ப்பமான பெண் அவரை திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதல்
உத்திர பிரதேசம், மீரட் மாவட்டத்தில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு வினோத் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் இருவருக்கும் இடையே ஒத்துவரவில்லை என்று ஒரே ஆண்டில் பிரிந்தனர்.
அதன்பிறகு அந்த பெண் தனது பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்தார். அப்பொழுது ஆதேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது, பின்னர் அதுவே காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர், பின்னர் இவர் கர்பமாகியுள்ளார்.
கொடூர கொலை
இந்நிலையில், அந்த பெண் தனது கள்ளக்காதலனை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுத்த ஆதேஷ் அந்த பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டார், அதற்கு நான்கு பேரின் உதவியை நாடினர். பின்னர், திட்டமிட்டபடியே ஜூலை 2-ம் தேதி ஆதேஷ் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அவர் வீட்டிற்கு வந்ததும் இவர்கள் செங்கலால் அவரை தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர். அதன்பிறகு அவரது உடலை வயல்வெளியில் வீசிவிட்டு சென்றனர். மேலும் தலைமறைவாக இருந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.