உத்திர பிரதேச சட்டசபை தேர்தல் : 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்
upassemblyelections
6thphaseupelection
By Swetha Subash
உத்தரபிரதேச மாநிலத்தில் 57 சட்டசபை தொகுதிகளுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது.
இதில் 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் மேலும் 2 கட்ட தேர்தல் மீதமுள்ளது.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் 57 சட்டசபை தொகுதிகளுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
கோரக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தனது வாக்கை பதிவு செய்தார்.
காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் 9 மணி நிலவரப்படி 8.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.