கரும்பு காட்டிற்குள் கதறிய 13 வயது சிறுமி.. இளைஞரின் கொடூர செயல் - அதிர்ச்சி!
இளைஞர் ஒருவர் 13 வயது சிறுமியை செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல்
விழுப்புரம் மாவட்டம், சிறுவந்தாடு அருகே பரசுரெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார், இவரது பெற்றோர் கேரளாவில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவர் தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வறுகிறார்.
இவர் அதே பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவரை காதலித்து வந்துள்ளார். அவர்கள் மாலை பொழுதில் இருவரும் கரும்பு தோட்டத்திற்குள் சென்று தனியாக பேசிகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தனியார் பள்ளி டிரைவர் மணிகண்டன் (வயது 38) இருவரையும் கண்டித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
இந்நிலையில், மணிகண்டன் அந்த பிளஸ் 2 மாணவரை கரும்பால் அடித்து தாக்கி விரட்டியுள்ளார். அதன்பிறகு அங்கு இருந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்தது மட்டுமில்லாமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி அலறி கத்தயுள்ளார். பின்னர், வீட்டிற்கு வந்த அந்த சிறுமி தனது பாட்டியிடம் நடந்ததை கூறியுள்ளார்.
இதனையடுத்து உறவினர்களுடன் சென்று மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர், பின்னர், மணிகண்டன் பாலியல் வன்கொடுமை செய்ததை உறுதிப்படுத்தி அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.