வேறு சாதி வாலிபருடன் காதல்.. பெற்ற மகளின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்ற தந்தை - அதிர்ச்சி!
பெண் ஒருவர் வேறு சமூக வாலிபரை காதலித்ததால் தந்தை கொடூரமாக கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் விவகாரம்
பெங்களூர் புறநகர் தேவனஹள்ளி தாலுகா பிதலூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் 45 வயதான இவர் கோழி இறைச்சி விற்பனை செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர், கவனா(20) மற்றும் 17 வயதான பெண் ஒருவர்.
இவரது 2வது மகள் வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்தார். இதனையறிந்த மஞ்சுநாத் பலமுறை கண்டித்துள்ளார். அவரது பேச்சை கேட்காமல் 2வது மகள் அந்த வாலிபருடன் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார், அவருக்கு 17 வயது ஆனதால் போலீசர் மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கொடூரக் கொலை
இந்நிலையில், ஆத்திரத்தில் இருந்த மஞ்சுநாத்திடம் அவரது மூத்த மகள் தான் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனால் ஏற்கனவே உனது தங்கை வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்து ஓடியுள்ளார். எனவே நீயும் வேறு சமுதாயத்தை சேர்ந்தவரை காதலிப்பதை நிறுத்தி விடு என்று கூறியுள்ளார்.
அவர் கண்டித்தும் கவனா கேட்கவில்லை இதனால் ஆத்திரத்தில் மகளை கடுமையாக திட்டியதுடன், இரும்பு கம்பியால் தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த கவனா மயங்கி விழுந்தார். அப்போது கோழி அறுப்பதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து மூத்த மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
பின்னர், மஞ்சுநாத், விஸ்வநாதபுரம் போலீசில் சரண் அடைந்தார். மேலும் தனது மகளை ஆணவக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் உடனடியாக வீட்டிற்கு சென்று பார்த்தபொழுது அங்கு அவரது மகள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார், அவரது உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசர் விசாரணை செய்து வருகின்றனர்.