மகளின் காதலை எதிர்த்த பெற்றோர் - கொன்று முதலைகள் இருக்கும் நதியில் வீசிய கொடூரம்!
காதலித்ததால் தன சொந்த மகள் என பார்க்காமல் பெற்றோர் கொன்று வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல்
மத்தியப் பிரதேச மாநிலம், மோரேனா மாவட்டத்தில் உள்ள ரதன் பசாய் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்பால் சிங். இவருக்கு ஷிவானி என்ற 18 வயது மகள் உள்ளார். இவரும் இவரது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ராதேஷியாம் என்ற 21 வயது இளைஞரும் காதலித்துவந்தனர்.
அப்பொழுது பெண் வீட்டாருக்கு தெரியவந்தது, அதில் இவரது தந்தை கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஆனாலும் அவர்கள் தொடர்ச்சியாக சந்தித்து பேசி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த இவரது தந்தை கண்டித்துள்ளார்.
கொடூர கொலை
இந்நிலையில், அவர் கடந்த ஜூன் 3-ம் தேதி இருவரும் சந்தித்தனர். அப்போது ஷிவானியின் தந்தை மற்றும் உறவினர்கள் சிலர் சேர்ந்து இருவரையும் கடத்தி சென்றனர். பின்னர் அவரை சுட்டு கொலை செய்து, இருவரின் உடலையும் முதலைகள் அதிகம் இருக்கும் சம்பல் நதியில் தூக்கி வீசியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, பெண் குடும்பத்தார் வீட்டை காலி செய்தனர். அந்த காதலனின் பெற்றோர் சந்தேகத்தில் போலீசாரிடம் புகாரளித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், ஷிவானியின் தந்தை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், பேரிடர் மீட்பு குழு அந்த நதியில் உடலை தேடி வருகின்றனர்.