பெற்ற தாயை கொன்று சூட்கேசுக்குள் வைத்த கொடூரம் - ஆத்திரத்தில் மகள் செய்த காரியம்!

Attempted Murder Karnataka
By Vinothini Jun 13, 2023 07:27 AM GMT
Report

 கோபத்தில் தனது தாயை கொன்று சூட்கேசுக்குள் அடைத்து பெண் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாக்குவாதம்

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 39 வயதான பெண், இவர் ஒரு பிசியோதெரபிஸ்ட் என்று கூறப்படுகிறது. இவர் பெங்களூரில் வசித்து வருகிறார். இவரும் இவரது தாயும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

daughter-killed-her-mother-and-packed-in-suitcase

இதில் கோபம் அடைந்த அந்த பெண் அருகில் இருந்த கத்தியை எடுத்து அவரது தாயை குத்தியுள்ளார். அதனால் இவரது தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்டுகிறது.

போலீசார் அதிர்ச்சி

இதனை தொடர்ந்து, இவரது தாயாரின் உடலை சூட்கேசில் அடைத்து காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு போலீசார் சூட்கேசை திறந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.

daughter-killed-her-mother-and-packed-in-suitcase

பின்னர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நடந்த பொழுது இவரது மாமியார் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு தெரியாமல் இவர் கொலை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.