சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கறிஞர் - போக்சோ சட்டத்தில் கைது! என்ன நடந்தது?
சென்னை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கறிஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீப காலமாக தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. வீடு முதல் பள்ளி வரை அனைத்து இடங்களிலும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது பெற்றோர்களை அச்சமடையச் செய்திருக்கிறது.
இத்தகைய சூழலில், சென்னை திருவேற்காடு அருகே 10 வயது சிறுமிக்கு வழக்கறிஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த செவிலியர் ஒருவரின் 10 வயது மகன் மகளுக்கு கொளத்தூரை சேர்ந்த விசு என்ற வழக்கறிஞர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் விசுவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுமி சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.